தேசிய குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா எதிரொலி!

பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள். ராணுவத்தைக் கொண்டும் அடக்க முடியவில்லை கலவரத்தை . வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய கலவரத்தால் உயிர்ப்பலிகள் அதிகமாகி வருகிறது. ஜப்பானிய பிரதமர் அபே, இந்தியா சுற்றுப் பயணத்தை ரத்து செய்தார். அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில், மோடி - ஜப்பான் பிரதமர் சந்திப்பு ரத்து. பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம் ரத்து. இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சகோதரத்துவம் கொண்ட நாடு. ஆனால் தற்போதைய நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மூமின் பத்திரிகையாளர்களிடம் சொன்னது. மேகாலயா முதல்வரை சந்திக்க வர இருந்த பங்களாதேஷ் உள்துறை மந்திரி இந்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவினால் பயணத்தை ரத்து செய்தார். அமிதஷா அருணாச்சலபிரதேசம், மேகாலயா பயணங்களைப் போராட்டங்களுக்குப் பயந்து ரத்து செய்தார். ஐ.நா. மனித உரிமை ஆணையம், குடியுரிமைச் சட்ட மசோதா இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது. உலக நீதிபதிகள் கூட்டமைப்பு, “இந்தச் சட்ட மசோதா பல்வேறுவிதமான குற்றங்களுக்கு ஆதாரமாக அமையும். மேலும் மத சுதந்திரத்தின் எதிரி ஆகும்'' என அறிவித்துள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் தங்களின் சுற்றுலா வழிகாட்டிகளிடம் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. அசாம் மாநில பிஜேபி, அகாலிதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா. அஸ்ஸாம் பிரபல நடிகர் ஜாடின் போரா பிஜேபியில் இருந்து ராஜினாமா. நான் எனது மக்களுடன் உள்ளேன் என்று பேட்டி. கர்நாடகா மாநில ஐ.பி.எஸ். அதிகாரி அப்துர் ரஹ்மான் (மனித உரிமை ஆணையர்) தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். இதனை எதிர்பார்க்காத மத்திய பாரதீய ஜனதா அரசு மூச்சு திணறி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் கொண்டு வர உள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார். அதனால் ஆட்சியாளர்களே! மக்களின் உணர்வுகளை புரிந்து ஆட்சி செய்தால் மட்டுமே நாட்டிற்கு நல்லது. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைத் திருத்தம் செய்து மாற்றினால் மட்டுமே ஆட்சிக்கு ஆரோக்கியம். சட்டதிருத்த மசோதாவை மாற்றவில்லை என்றால், மக்களே மாற்றக் கூடிய சூழ்நிலையை, மக்களுக்கே உருவாக்கி விடாதீர்கள். நாட்டைச் சூழ்நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சியுடன் கொண்டு செல்லுங்கள். மதத்தில் பிரிவினை காட்டி, அப்பாவி மக்களைப் பலியாடுகளாக ஆக்கி விடாதீர்கள். வாழ்க இந்தியா! வளர்க ஜனநாயகம்!! எங்கும் ஒலிக்கட்டும் தேசத்தின் பற்று!!