காவலன் கைப்பேசி செயலி

தலைமை நிருபர் ஜனனி 




தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் கொடூரமான முறையில் கூட்டாகப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்திடும் பொருட்டு தமிழகக் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. ஜே.கே. திரிபாதி அவர்கள், மாநிலக் காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் காவலன் கைப்பேசி செயலி குறித்து அனைத்து பொதுமக்களும் அறிந்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடத்திடுமாறும் அதன் மூலம் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தங்களது உயிர் மற்றும் உடமைக்கு ஆபத்து ஏற்படும் என்றிருக்கும் சூழ்நிலையில் காவல்துறையின் உதவி உடனடியாகக் கிடைத்திடும் வகையில் 'காவலன் கைப்பேசி செயலியினை' உபயோகப்படுத்திட உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட மாநிலத்திலுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திருச்சி மாநகரக் காவல் துறையில் காவல் ஆணையர் திரு. ஏ. வரதராஜு அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின் படி மாநகரக் காவல்துறையினர் முறையாகத் திட்டமிட்டுப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, திருச்சி மாநகரத்தில் உள்ள பொது மக்களிடையே காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது திருச்சி மாநகரத்தில் பெரும்பாலான பொது மக்கள் தங்களது கைப்பேசியில் மேற்படி செயலியினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். திருச்சி மாநகரக் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் விபரம்: திருச்சி மாநகரக் காவல்துறையில் பணியில் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் காவலன் கைப்பேசி செயலி குறித்த அறிமுகக் கூட்டம் அதிகாரிகள் அளவில் காவல் ஆணையர் அவர்கள் தலைமையிலும், மற்றுமுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் அந்தந்தக் காவல் நிலையங்களில் சிறப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினரின் குடும்பத்தினர் களுக்கு மாநகரில் உள்ள அனைத்து காவலர் குடியிருப்புகளிலும் அந்தந்தப் பகுதிக்குரிய காவல் துறை அதிகாரிகளால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுச் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவலன் கைப்பேசி செயலியினை உபயோகப்படுத்துவது தொடர்பான விளம்பரப் பதாகைகள் திருச்சி மாநகரில் அனைத்து காவல் துறை அலுவலகங்கள், காவல் நிலையங்கள், காவல்துறை உதவி மையங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், மார்கெட் மற்றும் வாராந்திர சந்தை கூடுமிடங்கள், கோவில்கள் மற்றும் இதர முக்கியப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், காவலன் கைப்பேசி செயலி குறித்த விளக்கங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் அனைத்துப் பொது மக்களுக்கும் காவல் துறையினரால் மேற்கண்ட இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. காவலன் கைப்பேசி செயலி விளக்கங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் உதவியுடன் பொதுமக்களின் மத்தியில் பெரிய அளவிலான எல்.இ.டி திரை கொண்ட வாகனம் மூலமாக முக்கிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளன. மேலும், காவல் துறையினர் தங்களது வாகனங்களில் மேற்படி விளம்பரப் பதாகைகளை இணைத்துப் பொதுமக்கள் மத்தியில், அதற்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி மாநகர அனைத்து காவல் துறையினரும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மற்றும் இதரப் பகுதிகளிலும் மற்றும் அபார்ட்மென்ட் போன்ற குடியிருப்புப் பகுதிகளிலிலும் நேரடியாகச் சென்று செயல் விளக்கம் அளித்து, அந்தக் கணமே பொதுமக்கள் மேற்படி செயலியைத் தரவிறக்கம் செய்வதை உறுதி செய்துள்ளனர். மேற்படி காவலன் கைப்பேசி செயலி குறித்த விளக்கப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தும், கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் திரு. மணிகண்டன் அவர்கள் திருச்சிராப்பள்ளி ரெயின்போ பண்பலையில் கடந்த 14.12.2019ந் தேதியன்று 12.00 மணிமுதல் 13.00 மணி வரை நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்து காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணர்வினைக் கிராமப் பகுதியில் உள்ள பொது மக்களும் அறியும் வண்ணம் செய்துள்ளார். மேலும், காவல் உதவி ஆணையர் அவர்கள் 'காவலன் கைப்பேசி செயலி' பயன்பாடு மற்றும் செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துதல் தொடர்பான ஒரு வீடியோ பதிவினைத் திருச்சி மெயில் டி.வி நிறுவனத்தின் உதவியுடன் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு அனைத்துப் பொது மக்களுக்கும் சென்று சேரும் வண்ணம் செய்துள்ளார். மேலும், என் திருச்சி என்ற பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார். மேற்படி காவலன் கைப்பேசி செயலி' தொடர்பான விளக்கங்கள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவுகள் திருச்சி மாநகரில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் இடைவேளையின் போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 'காவலன் கைப்பேசி செயலி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் திருச்சி மாநகர அனைத்து காவல் துறையினரும் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாணவர்களைக் காவலன் செயலியின் விளம்பர தூதுவராகக் கருதி அவர்களின் மூலமாக S TRICHY CITY POLICE INEMNINTET IKKAVA அவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் காவலன் கைப்பேசி செயலி' குறித்த விழிப்புணர்வினைக் காவல் துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். திருச்சி மாநகர காவல் துறையினர் காவல் துறை தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணர் வினை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், இதில் முக்கிய நிகழ்வாக மேற்கண்ட அனைத்து விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் திருச்சி மாநகரத்தில் உள்ள பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணர்வினை அனைத்துத் தரப்பினரிடையேயும் ஏற்படுத்தி வருகின்றனர்.