கல்லுக்குள் ஈரம் ஹிட்லரின் காதல்

ஆசிரியர் சிந்தாபாஸ்


ஹிட்லர் எத்தனை பெரிய சர்வாதிகாரி! கொடுமை செய்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். கல்லுக்குள் ஈரம் என்பது போல, கொடுமைக்காரன் மனதிலும் காதல் இருந்தது. இந்தச் சம்பவம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தான் வெளி உலகிற்குத் தெரிய வந்தது. காதலித்தவர் அன்னா என்பவர். காதலி, தோழி, வழி நடத்துபவர், அறிவுரை கூறுபவர் என்று இருந்தவர். இறுதிக்கட்டத்தில் அவரைத் திருமணம் செய்துக் கொண்டார். ஹிட்லர் பற்றிய ஒரு குறும்படம் எடுக்க வந்த போது தான் பழக்கமாகி, நெருக்கமாகி, காதலியானார். காதலைப் பற்றி வெளியே சொன்னதுமில்லை. கடைசி கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட பின் 40 மணி நேரம் மட்டுமே வாழ்ந்தார் என்பது ஜீரணிக்க முடியாத சம்பவம். இரண்டாம் உலகப் போர் வெகு தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகமெங்கும் துப்பாக்கி வெடிச் சத்தமும், பீரங்கிப் புகை மண்டலமாக மாறி இந்தச் சமயம் ஜெர்மனியின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்துக் கொண்டிருந்தது. அப்போது கூட அன்னா - ஹிட்லரிடம் தனக்கிருந்தத் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவில்லை . எதிரணியினர் 1945 ஏப்ரல் 29 அன்று பக்கத்திலுள்ள இடங்களைத் தங்கள் வசப்படுத்திய குஷியில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். ஹிட்லர் கைது செய்யப்பட வேண்டிய நேரம் - காலம் நெருங்கி விட்டது. அன்றைய தினம் ஹிட்லரும் அன்னாவும் திருமணம் செய்துக் கொண்டனர். சுமார் 40 மணி நேரம் அவர்களது திருமண வாழ்வு நீடித்தது. இருவரும் தனிமையான பகுதிக்குச் சென்றனர். அன்னா தான் கொண்டு வந்திருந்த சயனைடு குப்பியை வாயில் போட்டு விழுங்கினாள். ஹிட்லர் தன் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்தார். இவர்கள் இருவருக்குள் இருந்த உறவு, ஜெர்மன் மக்களுக்கு வியப்பாக இருந்தது. பொதுவெளியில் தங்கள் காதலைக் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். கொடூரன் என்று உலகம் பயந்து வந்த ஹிட்லரின் மனதிலும் காதல் என்ற துளிர் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை .