தன்ராஜ் / மொய்தீன்
அனுமனுக்குப் பின்னால் ராமரா?
“மோடியும் - அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல” - சிவசேனா -
சிவசேனாவும், பா.ஜ.க.வும் ஒரே கருத்தை உடைய ஒருங்கிணைந்தக் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தவர்கள். ஆட்சிக் கட்டில் மோகத்தால் இரு கட்சிகளிடையே நீயா, நானா என்ற ஈகோ ஏற்பட்டு பிரிந்து விட்டன. இப்போது ஒருவரை யொருவர் குறை சொல்லியும், குற்றம் சுமத்தியும் வருகின்றனர். பிரதமர் மோடியின் சர்வாதிகார சட்டங்களை எதிர்த்து, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில், மோடியையும், அமித்ஷாவையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
சாம்னா நாளேட்டில் கூறப்பட்டிருப்பதா வது:- நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாஜக வெல்ல முடியாத கட்சியாகத் தோன்றியது. ஆனால் டெல்லி சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி ஒரு அட்டை வீடு போல சரிந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. ராமரைத் தான் கிட்டத்தட்ட முன்னிறுத்தியது. ஆனால் அனுமனை வழிபடும் கெஜ்ரிவால், டெல்லியில் ராமராஜ்ஜியத்தைக் கொண்டு வந்துள்ளார். இங்கு அனுமனுக்குப் பின்னால் ராமர் நின்றார். தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் துரோகிகள் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். எனவே ஒட்டு மொத்த டெல்லியும் அந்த முத்திரையைப் பெறப் போகிறதா? மோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதையே டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு காட்டுகிறது. எந்த நாடும் மதம் இல்லாமல் இல்லை . ஆனால் மதம் என்பது தேசபக்தி என்று அர்த்தம் அல்ல.
அர சியல் ஆதாயத்திற்காக மத பிரச்சனைகள் தூண்டப்பட்டன. ஆனால் அதை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. மோடியும், அமித்ஷாவும் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கட்டுக்கதையை மக்கள் கடந்து செல்ல வேண்டும். பிரதமர் மோடிக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான பொதுவான அம்சம் இருவரும் சுயநலவாதிகள் என்பது தான். ஆனால் மோடிக்குப் பெரும் ஆணவமும் உள்ளது. கெஜ்ரிவால் ஒரு முறை முழுநாட்டை யும் கைப்பற்ற விரும்புவதாகக் கூறினார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் தனது வரம்பை உணர்ந்து கொண்டு, டெல்லியில் தனது கட்சியைக் கட்டமைத்துக் கொண்டார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என பாரதீய ஜனதா உறுதி அளித்து இருந்தது. ஆனால் 15 ரூபாய் கூட செலுத்தப்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் மூலமாக, நாம் கண்டறிந்த உண்மை என்னவென்றால், மோடி தன் ஆணவத்தின் அடிப் படையில் தான் சர்வாதிகாரி போல ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் கொண்டி ருக்கிறார். இந்த ஆணவம் நாட்டை ஆள்வதற்குச் சரியா னதாக இருக்குமா என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள சூழ்நிலை, எங்குப் பார்த்தாலும் போராட்டம், வேலை வாய்ப் பின்மை , மக்கள் நிம்மதி இழந்து, பதற்றத்திலும், கலக்கத்திலும் வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள். இந்திய மக்கள் எப்போது நிம்மதியாக வாழ்வார்கள் என்று நம்மை படைத்த இரட்சகனுக்குத் தான் தெரியும்.