காவல் துறையின் மனிதாபிமான செயல் 

தலைமை நிருபர் ஜனனி


காவல் துறையின் மனிதாபிமான செயல் 


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மஞ்சம்பட்டி தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே நடந்து வந்த ஒட்டன்சத்திரம் சேர்ந்த ஒரு சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை   வழிமறித்து பாதுகாப்பு பணியில் இருந்த மணப்பாறை போலீசார் விசாரணை செய்தனர். 



  
  வேளாங்கண்ணிக்கு செங்கல் சூளை தொழிலுக்கு சென்றனர் வேலை இல்லாததால் மீண்டும் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு வருவதற்கு 9 நாட்களாக நடந்துவருவதாகவும்


 இரண்டு நாட்களாக பசியில் இருப்பதாக கூறியதால் பின்னர் போலீசார் அனைவருக்கும் உணவு வழங்கி செலவுக்கு கையிலிருந்த தொகையையும் கொடுத்து அந்த வழியாக வந்த லாரியில் ஏற்றி சொந்த ஊரில் இறக்கிவிட்டு மணப்பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு லாரி ஓட்டுனரின் கூறி அவர்களை பாதுகாப்பாக  அனுப்பி வைத்தனர்.