திருச்சியில் ரத்த தான முகாம்

தலைமை நிருபர் ஜனனி / நிருபர் ரூபன்


தேசிய கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை திருச்சி யும் இணைந்து ஓரு நாள் ரத்த தான முகாமை 27 - 04-2020 இன்று  தேசியக் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  இருக்கும் அவசர மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகளின் தேவையை மனதில் கொண்டு நடத்தப்பட்டது. இதில்250 திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.



கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தர ராமன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் பிரசன்ன பாலாஜி,  உடற்கல்வி துறை பேராசிரியர் முனைவர் பூபதி மற்றும் அரசு மருத்துவர்கள் உடன் இருந்தனர்.