வேலை நிறுத்தம் வாபஸ்

தலைமை நிருபர் ஜனனி 


திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்


கொரோனா நோய் தொற்றின் காரணமாக கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருச்சி காந்தி மார்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் பல தளர்வுகள் மூலம் கடைகள் திறக்கப்பட்டதால் , வியாபாரிகள் காய்கறிகள் கடையை காந்தி மார்கெட்டில் திறக்க அனுமதி கோரி வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர்.



இந்த நிலையில் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் மற்றும் வியாபரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வியாபாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் என்று அறிவித்துள்ளனர்.வரும் ஜுன் மாதம் 30 தேதிக்கு மேல் காய்கறி மொத்த வியாபாரம் காந்தி சந்தையில் இயங்க  முடிவு செய்யப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.