தலைமை நிருபர் ஜனனி
திருச்சி ஸ்ரீரங்கம் சித்திர வீதியில் உள்ளவர் குடும்ப அட்டைக்காக ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார் நேற்று 10.06.2020ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து அவைரை தொலைபேசியில் அழைத்து நீங்கள் நேரில் வாங்க என் குயரி செய்யனும் என்று கூறியுள்ளனர்.அவர் நேரில் சென்றுள்ளார்.
அங்குள்ள துணை வட்டாச்சியர் கொடி நாளுக்கு பணம் ரூ.300 கொடுங்கல் என்று கூறியுள்ளார் . இவரும் கொடுத்துள்ளார். ஆனால் ரசீது ரூ.100 மட்டுமே வழங்கினார். என் குயரி என்று அழைத்து ரூ.300 வாங்கி கொண்டு ரூ.100 மட்டும் ரசீது கொடுக்கிறீங்க என்று கேட்டதற்கு அமைதியா இருங்க எல்லாைைரையும் அனுப்பி விட்டு பேசுகிறேன் என்று கூறியுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து அவரை கூப்பிட்டு உங்களுக்கு ரசீது தான பிரச்சைனை என்று கூறி மீத தொகைக்கும் ரசீது வழங்கியுள்ளார்.
கொரோனா பீதியில் பிழைக்க வழியின்றி தவிக்கும் பாமர மக்களை இப்படி கொடி நாள் வசூல் என்று கூறி பணம் பரிப்பது நியாயமா ? ராணுவ வீரர்களுக்காக கொடி நாள் வசூழிப்பது ெது மக்களின் பங்கு இருக்க வேண்டியதுதான் ,அதற்காக ரூ.300 வாங்கி கொண்டு ரூ.100 ரசீது தருவதும் நியாயமா ? கேள்விகள் கேட்டபிறகு மீதிக்கு ரசீது தருவதும் ராணுவ வீரர்களின் பேரை சொல்லி இப்படியா பகல கொள்ளை அடிப்பது என்று அங்கு வந்த அனைத்து பெதுமக்களும் முனு முனுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.