தலைமை நிருபர் ஜனனி
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில அரசு வழங்கிய ஓபிசி OBC மாணவர்களுக்கான உயர் கல்வி, மருத்துவ கல்வி மற்றும் தனியார் துறைகள், சிறப்பு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கே.என்.அருண் தலைமையில் தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.