திருச்சியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது

தலைமை நிருபர் ஜனனி


திருச்சி அம்மா மண்டபம், விஸ்வ ஹிந்து சேவா சமிதி அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் - பஜ்ரங்தள் மற்றும் ஜெய் ஆஞ்சநேயா உடற்பயிற்சி கூடம் சார்பாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.




பூஜனீய மன்னார்குடி செண்பகமன்னார் செண்டலங்கார ஜீயர் அவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை வழங்கினார்.


நிகழ்ச்சியில் VHP மாநில அமைப்பாளர் திரு. சேதுராமன், VHP மாநில இணைச் செயலாளர் திரு.காளியப்பன், பஜ்ரங்தள் மாநில பொறுப்பளர் திரு.பாரத், VHP ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் திரு.கோபாலன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..
ஜெய் ஆஞ்சநேயா உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்திரு.சர்வேஸ்வரன் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.