திருச்சி மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு...

தலைமை நிருபர் ஜனனி 


திருச்சி மேற்கு  தொகுதிக்கு உட்பட்ட பீமநகர் 48வது வார்டு பக்காளி தெருவில் குழந்தைகள் அங்கன்வாடி அருகில் குழந்தைகளின் நலன் கருதி (கட்டிட) குப்பைத்தொட்டியை மாநகராட்சி நிர்வாகம் நான்கு மாதத்திற்கு முன்பு இடித்தது .



இடித்த கட்டிட மண்களை அள்ளி சுத்தம் செய்யாமல் அந்த இடத்தில் மண்கள் குவியலாக இருக்கிறது.



மேலும் மக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அங்கான் வாடி மையம் அருகில் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மண்களை அள்ளி சுத்தம் செய்து பூச்செடிகள் வைத்து பராமரிப்பு செய்தால் நோய் பரவும் ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்றலாம்.