தலைமை நிருபர் ஜனனி / நிருபர் ரூபன்
திருச்சியில் முதல் முறையாக 100 அடி கொடிக்கம்பம் அமைத்து சுதந்திர தின கொண்டாட்டம்!
நாடு முழுவதும் இன்று 74வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி தேசியக் கல்லூரியில் 100 அடியில் கொடிக்கம்பத்தில் மூவர்ண கொடி கம்பீரமாய் பறந்து வருகிறது. தற்போது திருச்சியில் தேசிய கல்லூரியில் தான் 100 அடியில் முதல் முறையாக அமைக்ப்பட்டுள்ளது.
நூற்றாண்டுகளைக் கடந்த பெருமை மிக்க இந்த கல்லூரியில் 1932 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை பறக்க விட்ட தேசிய கல்லூரியின் மாணவர் ஆர்ய பாஷ்யத்தினை பெருமைப்படுத்தும் விதமாகவும், தேசியம் என்னும் சொல்லை இம்மண்ணின் உச்சரிக்க அச்சப்பட காலத்தில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு தேசிய கல்லூரி எனப் பெயர் சூட்டிய பெருமக்களை நினைவு கூறும் வகையிலும் இந்த 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவான இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எதிராக அயராது பணி செய்த மருத்துவ நிபுணர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக சேவகர்கள் என 25 பேருக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்நிகழ்வில் கல்லூரி செயலர் ரகுநாதன், கல்லூரி முதல்வர் சுந்தரராமன், திருச்சி எல்ஐசி முதன்மை மேலாளர் கணபதி சுப்பிரமணியன், உதவி கிளை மேலாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி துறை தலைவர் முனைவர் பிரசன்ன பாலாஜி செய்திருந்தார்.