திருச்சி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்...

 தலைமை நிருபர் ஜனனி


திருச்சி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் நல்லாதரவுடன் மாவட்ட செயலாளர் M.கலீல் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் S.T.ராஜ் காம்ப்ளக்ஸில்
மக்கள் தலைவரின்  45 வருடம்  திரை உலக சாதனையை முன்னிட்டு மக்கள் காவலன் V.S.எபிநேசர் உறையூர் கனகவேல் வடிவேல் நகர் ரஜினிகுமார் புத்தூர் D.ஜோசப்ராஜ் ஏகிரி மங்கலம் பாபா B.சரவணன் மகளிரணி S.தேவி ஆகியோர் ஏற்பாட்டில்  சிறப்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.அதன் பிறகு


 இரண்டு மாற்று திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
 இந்த  நிகழ்வில்  மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலிந்த குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.



தொடர்ந்து உறையூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைந்துள்ள 
மகப்பேறு மருத்துவமனைக்கு பெட்ஷீட்கள்  மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.



இந்த நற்பணியில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மாநகர பகுதி நிர்வாகிகள் மக்கள் தலைவரின் காவலர்கள் மகிழ்ச்சியுடன்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.