தலைமை நிருபர் ஜனனி
திருச்சி காந்தி மார்க்கெட் ஆட்டிறைச்சி கடையில் சோதனை....
திருச்சியில் இன்று 01.08.2021 ஞாயிற்றுகிழமை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R ரமேஷ்பாபு அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சி கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 22 கடைகள் ஆய்வு செய்யப்பட்டு அதில் ஒரு கடையில் 18 கிலோ பழைய ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.மேலும் அந்த கடையின் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன்படி பிரிவு 55, பிரிவு 63 கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு Compound offense இன் கீழ் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்ற பழைய கெட்டுப்போன ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்தாலோ அல்லது ஆய்வின் போது கண்டறிந்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R ரமேஷ்பாபு கூறினார்.
படம்: ஜான்பிராகஷ்