திமுக பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கு; ஆஜரான அமைச்சர்

 தலைமை நிருபர் ஜனனி

திமுக பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கு; ஆஜரான அமைச்சர்

ஆறுமுகநேரியில் முன்னாள் திமுக நகர செயலாளர் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.


தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி யில் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷை கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயரும் சேர்க்கப்பட்டது. இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஆஜரானார்.அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணனின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தது. அவரும் இன்று நேரில் ஆஜரானார். கொலை முயற்சி வழக்கில் அதிமுக, திமுக இரண்டு பிரமுகர்களும் நேரில் ஆஜரானதால் கட்சியை இரு கட்சியை சேர்ந்த தொண்டர்களும் நீதிமன்றத்தின் அருகே குவிந்தனர். பதற்றத்தை தடுக்கும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் ஆஜராகாததால் வரும் 19ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு வழக்கை விசாரித்தார்.