தலைமை நிருபர் ஜனனி
இந்த செய்தியைப் படிப்பதற்கு முன்பு ”வெள்ளை அறிக்கை” என்றால் என்ன?!-என்பதைப் பற்றி முதலில் நாம்தெரிந்துக்கொள்வோம்.வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ (அல்லது) ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்து கொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக (அல்லது) புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்ட அரசின் கொள்கையை சட்டவடிவம் ஆக்குவதற்கு முன் மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக ”வெள்ளை அறிக்கை” வெளியிடும் வழக்கம் கனடாவில் இன்றும் இருந்து வருகிறது.
அந்த அடிப்படையில்தான் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது ”வெள்ளை அறிக்கை” வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.